×

வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மேளா: கலெக்டர்களுக்கு துறை ஆணையர் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஜானி டாம் வர்கீஸ் ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 15.2.2022 நாளிட்ட தலைமை செயலரின் ஆய்வுக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம், வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டம், சிறுதொழில்கள் மற்றும் பெட்டிக்கடை துவங்குவதற்கான வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் என்.எச்.எப்.டி.சி மூலம் வட்டித்தொகை மானியமாக வழங்குதல் ஆகிய திட்டங்களை ‘வங்கிக்கடன் மேளா’ நடத்தி முழுமையாக செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்தித்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திட சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுடன் வங்கிக்கடன் மேளா நடத்தி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மேளா: கலெக்டர்களுக்கு துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bank for Displaced People ,Department of the Commission ,Chennai ,Minister of Displaced Welfare ,Johnny Tom Varghese ,Chief Secretary ,Lab ,Bank Mela for Displaced People to Improve ,Department ,Dinakaran ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...